
புதுடெல்லி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த ஆடுகளம் முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டதன் காரணமாகவே இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது என்றும், நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான தோல்விகளை சந்தித்த பிறகும் இந்திய அணி பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments