Header Ads Widget

Responsive Advertisement

https://static.hindutamil.in/hindu/uploads/news/2025/11/04/xlarge/1382071.jpgஇனி வெற்றி மேல் வெற்றியே..! - உலக சாம்பியன் ஹர்மன்பிரீத் கவுர் உற்சாகம்

நவிமும்பை: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் நேற்று முன்​தினம் தென் ஆப்​பிரிக்க அணியை 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி முதல் சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​துள்ள ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய அணி. முதலில் பேட் செய்த இந்​திய அணி ஷபாலி வர்மா (87), தீப்தி சர்மா (58), ஸ்மிருதி மந்​தனா (45), ரிச்சா கோஷ் (34) ஆகியோரது சிறப்​பான பேட்​டிங்​கால் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 298 ரன்​கள் குவித்​தது.

299 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி​யானது தீப்தி சர்​மா, ஷபாலி வர்மா ஆகியோரது சிறப்​பான பந்​து​வீச்​சால் 45.3 ஓவர்​களில் 246 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. கேப்​டன் லாரா வோல்​வார்ட் 101 ரன்​கள் விளாசிய போதி​லும் மற்ற வீராங்​க​னை​களிடம் இருந்து சிறந்த செயல் திறன் வெளிப்​ப​டாத​தால் தென் ஆப்​பிரிக்க அணி தோல்​வியை சந்​தித்​தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments