
பிரிஸ்பன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது டி 20 கிரிக்கெட் போட்டி இன்று பிற்பகல் 1.45 மணிக்கு பிரிஸ்பனில் நடைபெறுகிறது.
5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் டி 20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வெல்லும். மாறாக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் தொடர் 2-2 என சமனில் முடிவடையும். எப்படி இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 17 வருடங்களாக டி 20 தொடரை பறிகொடுக்கவில்லை என்ற சாதனையை இந்திய அணி தக்கவைத்துக் கொள்ளும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments