Header Ads Widget

Responsive Advertisement

https://static.hindutamil.in/hindu/uploads/news/2025/11/06/xlarge/1382297.jpgஆஷஸ் தொடருக்கான அணி அறிவிப்பு: ஆஸி. அணியில் லபுஷேன்

கோல்ட் கோஸ்ட்: ஆஸ்​திரேலியா - இங்​கிலாந்து அணி​கள் இடையி​லான பாரம்​பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடர் வரும் 21-ம்
தேதி பெர்த் நகரில் தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் இந்​தத் தொடரின் முதல் போட்​டிக்​கான 15 பேர் கொண்ட ஆஸ்​திரேலிய அணியை அந்​நாட்டு கிரிக்​கெட் வாரி​யம் அறி​வித்​துள்​ளது. இதில் முன்​னணி பேட்​ஸ்​மே​னான மார்​னஷ் லபுஷேன் மீண்​டும் அணிக்கு திரும்பி உள்​ளார்.

மோச​மான பார்ம் காரண​மாக கடந்த ஜூலை மாதம் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் மார்னஸ் ஷபுஷேன் நீக்​கப்​பட்​டிருந்​தார். இதைத் தொடர்ந்து அவர், உள்​ளூர் போட்​டி​யில் சிறப்​பாக விளை​யாடி மீண்​டும் தேசிய அணி​யில் இடம் பிடித்​துள்​ளார். 31 வயதான தொடக்க வீர​ரான ஜேக் வெத​ரால்ட் அறி​முக வீர​ராக சேர்க்​கப்​பட்​டுள்​ளார். அதேவேளை​யில் மேட் ரென்​ஷா, சாம் கான்​ஸ்​டாஸ் ஆகியோ​ருக்கு வாய்ப்பு வழங்​கப்​பட​வில்​லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments